வடக்கில் சுகாதார சேவைகளை தடையின்றி வழங்க தீர்மானம்! ஆளுநர் நா.வேதநாயகன்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Nagalingam Vedanayagam
By Thevanthan Apr 01, 2026 02:00 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான 'மாதவம்' சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (31.03.2026) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாதவம் சிகிச்சை நிலையம் தொடர்பில் தீர்மானம்

தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் “மாதவம்” சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரித்து, அதனை நிர்வகிப்பதற்கு உரிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சுகாதார சேவைகளை தடையின்றி வழங்க தீர்மானம்! ஆளுநர் நா.வேதநாயகன் | Discussion On Health Services

இது மத்திய சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு ஒருங்கிணைப்பில் செயற்படவுள்ளது.

அத்துடன், புதிய சிகிச்சை நிலையத்துக்காகக் கைதடியில் அரச காணி உத்தியோகபூர்வமாகச் சுகாதாரத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கெனத் துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட நவீன கட்டட வரைபடங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

நிபுணர்களை உருவாக்க ஆலோசனை

தேசியக் கொள்கைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தலா ஒரு சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் அதற்கான ஆளணி அனுமதிகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் சுகாதார சேவைகளை தடையின்றி வழங்க தீர்மானம்! ஆளுநர் நா.வேதநாயகன் | Discussion On Health Services

மேலும், ஒட்டிசம் குறைபாட்டுக்கு மாத்திரமன்றி, மூளைவளர்ச்சி தாமதம், அறிவுசார் குறைபாடுகள், மூளை முடக்குவாதம் மற்றும் ஏனைய நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் இந்த நிலையத்தினூடாக முழுமையான சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

உளவள மற்றும் நரம்பியல் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாகப் பேச்சுச் சிகிச்சை மற்றும் தொழில்சார் சிகிச்சை போன்ற இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைநெறிகளை ஆரம்பித்து நிபுணர்களை உருவாக்குவது குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

வடக்கில் சுகாதார சேவைகளை தடையின்றி வழங்க தீர்மானம்! ஆளுநர் நா.வேதநாயகன் | Discussion On Health Services

மேலும், மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுகளின் நிதியொதுக்கீடுகளுக்கு அப்பால், வெளிவாரியான கொடையாளர்களின் உதவிகளைச் சட்டபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் மருத்துவ நிபுணர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். 

வடக்கில் சுகாதார சேவைகளை தடையின்றி வழங்க தீர்மானம்! ஆளுநர் நா.வேதநாயகன் | Discussion On Health Services

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US