தேர்தல் கடமைகள் தொடர்பில் யாழில் இன்று கலந்துரையாடல்
யாழில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும் யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், இன்று (12.11.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam