மன்னாரில் எரிபொருளை சீரான முறையில் விநியோகிப்பது குறித்து விசேட கலந்துரையாடல்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் முகாமைத்துவத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அவசர கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (4.3.2026) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைமைகளை கருத்தில் கொண்டு எரிபொருள் தொடர்பான நிலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.
கலந்துரையாடல்
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள்,பொறுப்பாளர்கள், உட்பட மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்,. பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் உதவி பணிப்பாளர் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்,உட்பட அரச திணைகள் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டு வரும் நிலைமை களை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள், போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாடுகளை சுமுகமாக மக்கள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கும் வகையில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri