மன்னாரில் அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (18) மாலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அவசர முன்னாயத்த கலந்துரையாடல்
இந்த காலப்பகுதியில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் கலந்தரையாடப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகும் ஓர் பகுதியாக காணப்படுவதால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அனர்த்தங்களின் போது தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு 30க்கும் மேற்பட்ட தற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்
அவ்வாறான பாதுகாப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதை விட மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிலைமை ஏற்படுகின்ற போது அதை கடலுக்கு வெளியேற்றுகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மன்னார் நகரில் வெள்ள நீரை கடலுக்குள் செலுத்துவது தொடர்பாகவும்
தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அனைத்து முகாமைத்துவ உதவிப்
பணிப்பாளர் கே. திலீபன் மற்றும் முப்படையினர், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |