கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் க்ளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வசதிகள் மேம்படுத்தல் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெளிவுப்படுத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கட்சியின் மூத்த உறுப்பினர் இளையதம்பி கணேசபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட விழிப்புணர்வற்றோருக்கான வெள்ளைப்பிரம்பும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 19 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
