யாழில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகம் உறுதி செய்ய பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இன்று (24.03.2026) நடைபெற்ற இந்த கலந்துரையாடலை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
எரிபொருள் விநியோகம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் கடற்றொழில் போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


யுத்தம் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது! நளிந்த
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri