ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்
கணினி கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தில் இன்று (24) பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அத்துறை, ஆட்பதிவுத் துறையின் தலைமை அலுவலகத்திலும் அனைத்து அலுவலகங்களிலும் இன்று பொதுச் சேவைகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.
பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை
அதன்படி, இன்று செயல்படுத்தப்படவிருந்த அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் இயங்காது என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட பிழையை உடனடியாகச் சரிசெய்து, பொதுச் சேவைப் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேவையற்ற வகையில் பொதுமக்கள் எவரும் தலைமை மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் வருகைதர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan