வன்னி மக்களின் பிரச்சினை தொடர்பாக நியூசிலாந்து தூதுவருடன் கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி மற்றும் வவுனியா ஒருங்கிணைப்பாளர் நிரோஸ்குமார் ஆகியோர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்திந்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு நேற்று (10.02.2023) நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் வன்னி மாவட்டத்தின் அரசியல் கள நிலவரம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

கோரிக்கை
இதற்கமைய வன்னி மாவட்ட உழவர்களின் பெரும் குறையாக இருக்கும் நெல் காயவைக்க தனியான நிலப்பரப்பின் தேவை பற்றியும் வன்னி மாவட்டத்தின் நீண்டகாலத் குறையாக இருக்கும் தீயணைப்பு பிரிவின் தேவைப்பாடு பற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா முல்லைத்தீவு மக்களின் சிறுநீரக நோய் அதிகரிப்பு மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் தேவைப்பாடு பற்றியும் சுத்தமான சுகாதாரமான நீர்த் தேவை பற்றியும் உயர்ஸ்தானிகரோடு கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam