மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்
மன்னாரில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள், மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(27.2.2026) மதியம் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது, உழவு இயந்திரங்கள் பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கோரிக்கை
மன்னார் கடல் பகுதி ஏனைய இடங்களை விட மாறுபட்டது என்றும், அங்கு கடலடி தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிலை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு, பட்டி வலை மற்றும் சுருக்குவலை தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
நாரா (NARA) நிறுவனத்தின் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த தீர்வை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan