மாவட்ட அரசாங்க அதிபர் - அரசியல் கட்சிகளிடையே யாழில் விசேட கலந்துரையாடல்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மற்றும், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(27.10.2024) கலந்துரையாடல் நடைபெற்றது
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், “எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றனர்.
396 வேட்பாளர்கள் போட்டி
06 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஆதலால் வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய ஜனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்கின்றோம்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும், 17 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் பெறுபேறு தயாரித்து வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
