வெறும் இராணுவ பலத்தையோ அதிகாரத்தையோ பயன்படுத்தி ஆட்சி செய்ய முடியாது: ரவுப் ஹகீம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நேற்று முன்தினம் (16.01.2023) நடத்தப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம் கலந்து கொண்டிருந்தார்.
வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு மாணவர்கள் கோரிக்கை
இதன்போது, கடந்த காலங்களில் மக்கள் ராஜபக்ச, ரணில் அரசாங்கத்தை விரட்ட வேண்டுமெனவும், புதிய அரசாங்கமொன்று வரவேண்டுமெனவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு கோரியும் தொடர்ந்தும் மாணவர்கள் போராட்டங்களில் ஈட்பட்டு வரும் நிலையில் அவர்கள் மேல் நீர்த்தாரை பிரயோகம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து உங்களது கருத்து என்ன என்று ஊடகவியளாலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு அவர் பதிலளிக்கையில், ஜனநாயக நாட்டில் சிவில் சமூக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எந்த தங்குதடையுமின்றி நடைபெற வேண்டும்.
அவ்வாறான போராட்டங்களை தடுப்பதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நிரந்தரமாக அவர்கள் ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்பாக அமையாது.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
வெறும் இராணுவ பலத்தையோ, அதிகாரத்தையோ பயன்படுத்தி ஜனநாயக சக்திகளை முடக்கி ஆட்சியில் இருக்கலாம் என்பது சாத்தியப்படாது.
இந்த விடயத்தை மிக விரைவில் இந்த அரசாங்கம் புரித்து கொள்ளும். குறிப்பாக உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றால் உண்மையான தாற்பரியம் என்ன என்பதை இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
