கல்லாறு கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லாறு கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களை வேறு நிரந்தர தொழில்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்தும் முற்று முழுதாக விடுபடல் போனடற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிலர் பொது சேதங்களை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும்,எனவே இது தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகள் சட்டம் தமது கடமையை செய்ய தயாராக உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோத செயற்பாடுகளில்ஈடுபடுபவர்கள் சுயமாக நிரந்தர வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழில் ஒன்றினை பெற்று தருவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னிற்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பாக தொடர்புடையவர்கள் குற்றச்செயலர்கள் ஈடுபடுவதையும் சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதினை தவிர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் ,பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவத்தினர், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்,கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமசேவையாளர், பாடசாலை முதல்வர்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.