கிளிநொச்சியில் கரும்பு தோட்டக் காணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் (photos)
கிளிநொச்சி - அக்கராயன் பகுதியில் கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (12.04.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியார் தொழில் முயற்சியாளர்
குறித்த காணியில் கரும்பு செய்கையை மேற்கொள்வதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவர் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில், சுமார் 10 ஏக்கர் காணியை குறித்த தொழில் முயற்சியாளருக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கும், மூன்று ஏக்கர் காணியை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணி பகிர்ந்தளிப்பு தீர்மானம்
அத்துடன், பயிர் செய்கைகள் மேற்கொள்வதற்கு பொருத்தமான 146 ஏக்கர் காணிகளை குறித்த பிரதேசத்தினை சேர்ந்த காணி அற்ற மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அக்கராயன் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
