வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல்
முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (26.11.2024) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது இயன்றளவு சுற்றாடல் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சுற்றுலாசார் முதலீடு
சுற்றுலாசார் முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

குறிப்பாக வனவளத் திணைக்களம் பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்கள் என எவருக்கும் தெரியாமல் காணிகளை தமது திணைக்களத்துக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், வேலணை, வடமராட்சி கிழக்கு மற்றும் காரைநகர் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri