திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
திருகோணமலை- திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில்
முன்வைக்கப்பட்ட வழக்கினை இணக்கப்பாட்டுடன் விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது
தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(26.02.2024) சமயப் பெரியார்கள்
முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
தொடர் கலந்துரையாடல்
இந்த பேச்சுவார்த்தையில் சமயப் பெரியார்களான திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் ஆதினகர்த்தா ரவிச்சந்திர குருக்கள், தென்கையிலை ஆதீனம் அகஸ்தியர் அடிகளார் குருமகா சன்றிதானம் மற்றும் இளையமடம் திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகிய மூன்று சைவ பெரியார்களுக்கும் சட்டத்தரணி ராமலிங்கம் திருக்குமாரநாதன் ஆகியோருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

கலந்துரையாடல் முன்னேற்றகரமாக அமைந்ததுடன் கலந்துரையாடலில் பங்கு கொண்ட நான்கு பெரியார்களுக்கும் திருப்தி அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை தொடர் கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை திருக்கோணேஸ்வரா ஆலய பரிபால சபையின் தலைவருடன் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri