கிளிநொச்சியில் புதிய சிமெந்து தொழிற்சாலை அமைப்பு - டக்லஸ் தேவானந்தா (video)
கிளிநொச்சி பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதன் திட்டம் குறித்து கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சீமேந்து தொழிற்சாலை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
நீர்வேளாண்மை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டும்
இதேநேரம் பூநகரி பிரதேசத்தில் வனவளப் பாதுகாப்பு
திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் காணப்படும் பொருத்தமான
நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை மேற்கொள்வது
தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை
நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
