கடல் வளங்களை அழிக்கின்ற இழுவை வலை தொழிலை அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா(Video)

Indian fishermen Douglas Devananda Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Fisherman
By Sudaron Mar 04, 2023 08:09 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் கடல் வளங்களை அழிக்கின்ற இழுவை வலை தொழில் மேற்கொள்ளப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது  என இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (03.03.2023) கச்சதீவில் இடம்பெற்ற நல்லெண்ண கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கலந்து கொண்டிருந்தார்.

கடல் வளங்களை அழிக்கின்ற இழுவை வலை தொழிலை அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா(Video) | Which Destroys Marine Resources Cannot Be Allowed

அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.


அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுமூகமான நிலை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் விரைவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்திற்கு சுமூகமான நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கடல் வளங்களை அழிக்கின்ற இழுவை வலை தொழிலை அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா(Video) | Which Destroys Marine Resources Cannot Be Allowed

அதேபோன்று, காரைக்கால், நாகப்பட்டினம், புதுகோட்டை போன்ற பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தினர்.

கருத்துக்களை அமைச்சரவையில் அறிவிப்பு

சந்திப்பின் ஏற்பாட்டாளர் என்ற அடிப்படையில், நடுநிலையாக இரண்டு தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்துக்களை அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடல் வளங்களை அழிக்கின்ற இழுவை வலை தொழிலை அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா(Video) | Which Destroys Marine Resources Cannot Be Allowed

இச்சந்திப்பின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் எம். சி. முணுச்சாமி, பாதிய ஜனதா கட்சியின் நாகபட்டினம் மாவட்ட தலைவர் திரு. அருணாசலம், திராவிட முன்னேற்ற கட்சியின் நாகபட்டினம் மாவட்ட பதில் தலைவர் ஜி. மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களை புரிந்து கொள்வதாகவும், சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US