பிரித்தானியாவில் புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.621 மாறுபாடு இங்கிலாந்து பொது சுகாதாரம் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் மொத்தம் 16 பேர் B.1.621 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
B.1.621 மாறுபாடு கொலம்பியா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பிற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
B.1.621 மாறுபாடு மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது அல்லது தடுப்பூசிகளை குறைந்த செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றன.