வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அதற்கான கவுண்டர் ஒன்று இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் டிக்கெட் கவுண்டர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் விமான டிக்கெட்
இதன் மூலம் சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் அனைத்து இலங்கை தொழிலாளர்களும், சேருமிடத்தைப் பொருட்படுத்தாமல், இந்த தள்ளுபடி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri