காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து முதலுதவி படையணி சேவை நிறுத்தம்
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கடந்த மூன்று மாதங்களாக செயற்பட்டு வந்த முதலுதவி படையணி இன்று(4) தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்களம் ஆரம்பமானது முதல் சென்.ஜோன்ஸ் முதலுதவிப் படையணியினர் அங்கு நிலைகொண்டு முதலுதவி சிகிச்சைகளை வழங்கி வந்துள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

மேலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினராலும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர்.
முதலுதவி படையணி

எனினும் முதலுதவி படையணி தொடர்ந்தும் இயங்கி கொண்டியிருந்த நிலையில், நாளை மாலைக்குள் காலிமுகத்திடல் போராட்டக்களம் அகற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்று நேற்றும் இன்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து முதலுதவி படையணி இன்று முற்றாக அகன்று சென்றுள்ளது. அவர்களின் கூடாரங்களும் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan