சில பகுதிகளில் முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு!
பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர ஆகிய பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக நீர் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீர் விநியோகம்
தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் பொது மேலாளர் டி.பாரதிதாசன் கூறியுள்ளார்.
இதேவேளை, அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri
