பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று விசாரணை: சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை
பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடைமுறை தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
தீர்வுகளும் ஆலோசனைகளும்
இந்நிலையில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில், ஒழுக்கம் மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர, தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மற்றும் ஒழுக்காற்று மற்றும் கல்கிரிய பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் குறித்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |