ஜனாதிபதித் தேர்தலில் 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டி - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து 10 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa), ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரைக் களமிறக்காவிட்டாலும், அக்கட்சி வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தவுள்ளது.
அத்துடன், தொழில் முயற்சியாளரான மௌபிம கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, பொதுமக்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்க, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன், சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் ஜனாதிபதித் தேர்தல் சமரில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |