நீதிபதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்கு தயாராகும் ஆணைக்குழு
சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, நீதித்துறை சேவை ஆணையகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில், ஆணையகம், ஐந்து நீதிபதிகளை பணிநீக்கம் செய்தது. அவர்களில் மொரட்டுவ மாவட்ட நீதிபதி திலின கமகே மற்றும் மொனராகலை மேலதிக மாவட்ட நீதிபதி ரஞ்சனி கமகே ஆகியோர் அடங்கியிருந்தனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஏனைய மூன்று நீதிபதிகளும் அண்மையிலேயே நீதித்துறை சேவையில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அதை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
விசாரணை
விசாரணையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டு, குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு மூத்த நீதிபதி நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள ஒரு பதவிக்கு நீதியரசர் எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்னா அல்விஸ் ஆணைக்குழுவின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




