சிவப்பு மண்சரிவு அறிவுறுத்தல்களை உதாசீனப்படுத்திய மக்கள்: ஏற்பட்ட பெரும் அனர்த்தம்
பதுளை மாவட்டத்தில் பசறை - கனவெரல பிரதேசத்தில் மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் 63 குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (26.11.2025) பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வீடு வீடாக சென்று அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இதன்போது நான்கு குடும்பங்கள் மட்டுமே வெளியேறியுள்ளதாக பதுளை மாவட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழு நிலை கமத்தொழில் கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பானச அமைச்சின் ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,

பதுளை மாவட்டத்தின் நிலைமை
இன்றும் (27.11.2025) பெரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகாரிகளின் அறிவித்தல்களை உதாசீனப்படுத்தாமல் இருந்தால் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம். பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பதுளை மாவட்டத்தில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலருணவு பொருட்கள் வழங்குவதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam