இலங்கையை உலுக்கிய டித்வா புயல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - மண்ணில் புதையுண்ட பலர்
பதிய இணைப்பு
சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அனர்த்த நிலை காரணமாக, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.
இன்று (02) மாலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலையால் பலர் பாதிப்பு
மேலும், மோசமான வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், குருநாகலாவில் 53 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல்போயுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri