மட்டக்களப்பில் அனர்த்தத்தில் பாதிப்புற்ற கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அனர்த்த காலங்களின் போது வாழ்வாதாரம் பாதிப்புற்ற கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிவாரண பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனினால் இன்று(11.02.2024) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிவாரண உதவி பொருட்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நகர இணைப்பாளர் அப்துல் லத்தீப்பின் ஒருங்கிணைப்பில் இந்த 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கடற்றொழிலாளர்கள் கையளித்துள்ளனர்.
அத்துடன் 350 பயனாளிகளுக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட கடற்தொழிலில் திணைக்கள உயர் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், திராய்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |