நாடு செல்லும் வகையில் தொற்றினை கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் - இலங்கை மருத்துவ சங்கம்
ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு மேலும் முடக்கப்படுமானால் 10 000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குனரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வு கூறலின்படி செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7500 உயிர்களைக் காப்பற்ற முடியும். அதே போன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10 000 உயிர்களை பாதுகாக்க முடியும்.
டெல்டா திரிபின் புதிய மாறுபாடுகள் ஏனைய மாகாணங்களுக்கும் நிச்சயம் பரவக்கும் கூடும்.
தற்போது நாடு செல்லும் வகையில் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.



