நாட்டை முடக்கியது நியாயமற்றது! - சுயதொழிலாளர்கள் சங்கம்
தற்போதைய நிலையில் நாட்டை முடக்குவது நியாயமற்றது என சுயதொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு மூடக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள 65 லட்சம் சுயதொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் பொது ஊழியர்களின் பாதி சம்பளத்தை திரைசேரிக்கு வழங்கி, அதனை சுயதொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.
இல்லையென்றால், இந்த முடக்கப்பட்ட காலப்பகுதியில் யாருக்கும் கொடுப்பனவுகள் வழங்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை மூடக் கோருபவர்களுக்கு நாடு மூடங்கியிருக்கும் போது சுயதொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதரத்திற்கு வழி கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
