செயலிழந்த இந்திய மீன்பிடி இழுவை படகு: இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிப்பு
இயந்திர பிரச்சினை காரணமாக இலங்கைக் கடற்பரப்பில் செயலிழந்த இந்திய மீன்பிடி இழுவை படகு, சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் நேற்று (28.09.2022) இந்த இழுவை படகு கையளிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் இந்த இழுவை படகு கடற்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உதவிகளை வழங்கிய இலங்கை கடற்படையினர்
பைரவகாளி என்ற விசைப்படகு செப்டெம்பர் 25ஆம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளது.
இதன்போது இயந்திர பிரச்சினை காரணமாக படகு செயலிழந்துள்ளது.
இந்த நிலையில் படகில் இருந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உணவு, பானம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இலங்கை கடற்படையினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.