கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை: இந்திய துணை தூதுவருடன் சந்திப்பு (Photo)
வடக்கு மாகாண கடற்தொழில் இணையம் மற்றும் தேசிய கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
தற்போதைய கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று (27.09.2022) இடம்பெற்றுள்ளது.
இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய முதலமைச்சரை சந்திக்க அனுமதி
குறித்த விடயம் தொடர்பாக இந்திய முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டதாக கடல்தொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கு இந்திய துணை தூதர் அனுமதி பெற்று தருவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri