வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடு: அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி
இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட மாகாண கல்வி திணைக்கள பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இடமாற்றத்தில் 7 வருடங்களைக் கடந்தவர்களும் இடமாற்றத்தில் உள்வாங்கப் படாமல் இருக்கின்றமையை தான் கண்டுபிடித்து பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியாகவும் என்னை வேண்டுமென்றால் இடமாற்றம் செய்யுங்கள் என தான் நேரடியாக பணிப்பாளருக்கு கூறியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
கடமை என்றால் அதை நேர்மையாகவும் துணிவுடனும் செய்வேன். பொறுக்க முடியாது என்றால் இடமாற்றம் செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண கல்வி அமைச்சின் வருடாந்த இடமாற்றத்தில் பாரபட்சங்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் குறித்த பெண் அதிகாரியின் காணொளி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக ஆசியர் சங்கததை தூண்டி விட்டு தனது பதவியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டமை போராட்டத்தின் பின் தெரியவந்தது.
இதற்கமைய வடமராட்சியார் எவரையும் கல்விப் பணிப்பாளருகாகு பிடிக்காது என்றும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |