சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றிய காலப்பகுதியில் அவரது நெருக்கமான சகாவாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, பின் வந்த காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர் கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அவர், போதுமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
ஒப்பந்த அடிப்படை
இந்நிலையில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அவரை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு அவர் ஒப்பந்த அடிப்படையில் அப்பதவியில் கடமையாற்றவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
