இலங்கைக்கு ஆரம்ப நஷ்ட ஈட்டுத்தொகையை செலுத்தியுள்ள எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலின் இயக்குநர் நிறுவனம்
இலங்கை கடலில் தீப்பரவலுக்கு உள்ளாகி மூழ்கிய, 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' என்ற கொள்கலன் கப்பலின் இயக்குநர் நிறுவனமான, எக்ஸ்பிரஸ் ஃபீட்டர்ஸ், தமது காப்பீட்டாளர்கள் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு ஆரம்ப நஷ்ட ஈட்டுத்தொகையாக 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுச் செலவை ஈடுகட்ட 700 மில்லியன் ரூபாவை இலங்கை கோரியிருந்தது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மேலும் உரிமைகோரல்கள் தொடர்பில், எக்ஸ் - பிரஸ் ஃபீடர்ஸ் விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் - ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மலேசியாவின் விமானம் ஒன்றின் மூலம் தூய்மைப்படுத்தல் மற்றும் மாசு குறைப்பு முயற்சிகளுக்குத் தாம் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதாக எக்ஸ் - பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை கடற்படையினர், உள்ளூர் சட்டத்தரணிகள் மூலம் இலங்கை அதிகாரிகளுடன் தாம் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
