மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி இரவு நேர கடுகதி ரயில் சேவை ஆரம்பம்
மூன்று மாதங்களுக்கு பின்னர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி இரவு நேர கடுகதி ரயில் சேவை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து, கொழும்பிற்கான இரவு நேர கடுகதி ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இரவு நேர கடுகதி ரயில் சேவை மீண்டும் திங்கட்கிழமை (25) இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பிற்கான முதலாவது புகையிரதம் புறப்பட்டுச் சென்றது.
திங்கள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தது.சுகாதார நடைமுறைகளைப் பேணி பயணிகளின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகல் நேர ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.மட்டக்களப்பிலிருந்து தினமும் வழமை போன்று மாலை 5.10க்கும், இரவு 8.15க்கும், காலை 6.10க்கும் ரயில் சேவை இடம்பெறுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.வை.நுபைஸ் தெரிவித்தார்.



ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri