இலங்கைகக்கு நேரடியாக கிடைக்கவுள்ள பல பில்லியன் டொலர் முதலீடுகள்
இலங்கைக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு 1.3 பில்லியன் டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு, தீராத எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் கடந்த ஆண்டு விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
எனினும், தனது வெளிநாட்டு நேரடி முதலீட்டை 38 வீதத்தால், 1.08 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக முதலீட்டுச் சபையின் தரவு காட்டுகிறது.
முதலீட்டுச்சபை
இதில் ஒரு பகுதி இந்தியாவிலிருந்து கிடைத்தது.
இந்தியாவின் அதானி குழுமம் கடந்த ஆண்டு 442 மில்லியன் மதிப்பிலான இரண்டு காற்றாலை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேவேளை முதல் காலாண்டில், இலங்கை ஏற்கனவே 600 மில்லியன் டொலர் பெறுமதியான முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதாக முதலீட்டுச்சபையின் பணிப்பாளர் ரேணுக வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
