கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை
கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய மேலாளர் வி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் தகவல்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறிலங்கா ஏர்லைன்ஸ் 2017இல் இருந்து 2020 வரை, கொழும்பு - கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இடையில் மூன்று நேரடி விமானங்களை இயக்கியது.
எனினும் கோவிட் தொற்று காரணமாக அது நிறுத்தப்பட்டது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை.
இதேவேளை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் 9 நகரங்களுக்கு ஏற்கனவே இணைப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கொல்கத்தாவில் இருந்து நேரடி சேவைகளை மீண்டும் தொடங்குவது தங்களின் செயல்திட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
