முல்லைத்தீவில் நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது விசேட அதிரடிப்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு
முல்லைத்தீவு - கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சோதனைக்காக மாங்குளம் வீதி ஊடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் தடுக்கப்பட்டுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
எனினும் குறித்த டிப்பர் வாகனம் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காது தொடர்ந்து பயணித்தமையினால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கற்சிலைமடுவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது டிப்பர் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த இச்சோதனை நடவடிக்கையில் எதுவிதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri