ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு இராஜதந்திர பதவிகள்
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பலர் தமது உறவினர்களை இராஜதந்திர பதவிகளுக்கு நியமிப்பதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஆங்கில செய்தித்தாளொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு சேவையில், வெளிநாட்டில் உள்ள 55 இலங்கை தூதரகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள அமைச்சு ஆகிய இரண்டிலும் 98 வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் தமது பிள்ளைகள் உட்பட தமது உறவினர்களுக்கு பதவிகளைப் பெற்றுக்கொடுக்க முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சேவை
வெளிநாட்டு சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 264 ஆகும்.இதில் 166 பேர் மட்டுமே நிரப்பட்டுள்ள நிலையில் 98 வெற்றிடங்கள் உள்ளன.
முன்னாள் அமைச்சர் எம்.பி.திஸாநாயக்கவின் மகனும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் நெருங்கிய உறவினரும் பதவிகளை கோருபவர்களில் அடங்குவதாக ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.




