இரண்டாவது தடுப்பூசி தொடர்பில் ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர கலந்துரையாடல்! பவித்ரா வன்னியராச்சி
எஸ்ட்ராசெனெகா (கோவிஷீல்ட்) தடுப்பூசிகளை முதல் அளவாகப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது அளவாக பயன்படுத்துவதற்கான ஆய்வு விபரங்கள் இரண்டு வாரங்களில் வெளியாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்து வந்த தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இது விடயத்தில் அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்ட்ராசென்சேகாவை இரண்டாவது அளவாக வழங்குவதற்கு 582,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தேவையாக உள்ளன.
இந்த நிலையில் எஸ்ட்ராசெனேகாவை பெற்றுக்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றால், ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது அளவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது
அமைச்சர் இந்த பதிலைக் கூறினார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
