வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்! உத்தியோகபூர்வ தகவல்கள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணத்துடன் தொடர்புடைய ஊடக செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்கள் காரணமாக, சில உண்மைகள் உறுதிப்படுத்தப்படாத பிரசாரங்களாகவும், விசாரணைக்கு இடையூறாக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம், சந்தேக நபர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசாரணைகளின் போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தாத தகவல்கள் தேவையான போது உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.
அத்துடன், குறித்த விசாரணையை நிறைவு செய்வதற்கு அனைவரது ஆதரவும் கிடைக்கும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
