தினேஷ் சாப்டர் மரணத்தில் தொடரும் சந்தேகம்! பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்ட முக்கிய சாட்சிகள்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய, தினேஷ் சாப்டர் மரண விசாரணை இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக பொரளை பொது மயானத்தில் பணியாற்றும் இருவர் சாட்சியங்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
எனினும் நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் சாட்சிகள் ஊடகங்களுக்கு முகம் காட்டாமல் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு ஒரு குழுவினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் மனைவி தனது முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள்
கொலை நடந்த இடத்தில் பொரளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட கம்பித் துண்டு, இரத்தக் கறை படிந்த துணி, தினேஷ் சாப்டரின் நகங்கள், இரத்த மாதிரிகள் மற்றும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான தினேஷ் சாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சாப்டரின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதுவரை 175 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறைந்தபட்சம் 14 வழக்கு பொருட்கள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான தினேஷ் சாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
