மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர்!மனைவியிடம் தொடர் விசாரணை
கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நேற்று அவரது மனைவியின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக.தினேஷ் ஷாப்டரின் மனைவியிடமும் நான்காவது முறையாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் ஷாப்டர் தனது மாமியாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியின் மீதும் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அவர் தனது செய்தியில் “இவ்வளவு நல்ல மகளை வளர்த்து என்னிடம் ஒப்படைத்த அம்மாவுக்கு மிக்க நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்கள் மற்றும் வணிக பரிவர்த்தனைகள்
இதற்கமைய, மனைவியின் தாயாருக்கு தினேஷ் ஷாப்டர் அனுப்பியதாகக் கூறப்படும் தொலைபேசி குறுஞ்செய்தி மற்றும் அவருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது செய்தியில் “இவ்வளவு நல்ல மகளை வளர்த்து என்னிடம் ஒப்படைத்த அம்மாவுக்கு மிக்க நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தினேஷ் ஷாப்டரின் மர்மக் கொலை தொடர்பாக வெளிவந்துள்ள உண்மைகளை வரிசைப்படுத்தவும், இருவருக்கும் ஏதேனும் தகராறுகள் மற்றும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறியவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தினேஷ் ஷாப்டரின் மனைவி தனி ஷமினிடம் மீண்டும் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல சம்பவங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.