கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (21) மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரணம் தற்செயலானதா அல்லது கொலையா
இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்டகால விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த சம்பவத்தை முன்வைக்கும் முன்னோடி நீதிபதி முன்னிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.