தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மரபணு சோதனை
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பிரபல கிரிக்கட் வர்ணணையாளர் பிரயன் தோமசின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சிதா ஜயசூரிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிரயன் தோமசின் மரபணு குறித்து பரிசோதனை நடத்துமாறு நீதவான், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
மரபணு சோதனை
கொலை தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் கோரிக்கைக்கு அமைய பிரயன் தோமஸின் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இந்த விசேட விசாரணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அசேல மெண்டிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் நீதிமன்றில் முன்னிலையாகி மரபணு சோதனை குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
தினேஸ் ஷாப்டர் பிரபல காப்புறுதி நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.