தினேஷ் சாப்டர் படுகொலை விவகாரம்! கசியவிடப்படும் தகவல் குறித்து எச்சரிக்கை
பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல தகவல்கள் வெளியில் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தவேண்டாம் என பொலிஸ்மா அதிபர் விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று செய்திகளின் வெளியாகியுள்ளன.
சாப்டர் மரணம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகளை கடந்த வாரம் அழைத்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ண முக்கிய குற்றவாளி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கசியவிடப்படும் தகவல்கள் குறித்து எச்சரித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை
இதுவரை விசாரணையில் திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல தகவல்கள் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலசாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன தற்கொலையும் அதில் ஒன்று ஆனால் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை என விசாரணை குறித்து அறிந்த நபர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கைகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையால் இது தற்கொலை என உறுதி செய்ய முடியாது கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த சாத்தியக்கூறுகளையும் நிராகரிக்கவில்லை தடயவியல் அறிக்கைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
