பலத்த பாதுகாப்புடன் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது!(Video)
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் இன்றைய தினம் (25.05.2023) பொரளை பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நீதிமன்ற உத்தரவிற்கமைய, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் இன்றைய தினம் (25.05.2023) தோண்டி எடுக்கப்படவுள்ளது.
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.
இதனை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.
உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா
நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.
சடலம் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் தினேஸஷ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.
பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
