வர்த்தகரின் கொலைக்கு பின்னால் கிரிக்கெட் வர்ணனையாளரா! சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகிய காட்சி (Video)
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிரையன் தோமஸினுடைய இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
