சிற்றுண்டிச்சாலைக்கு சென்றது உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகரா..! எடுக்கப்பட்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளரான தினேஸ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிற்றுண்டிச்சாலைக்கு சென்றது தினேஸ் சாப்டரா அல்லது வேறு யாருமா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏனெனில் தினேஸ் சாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன் சென்ற சிற்றுண்டிச்சாலையானது, அவர் வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலை அல்லவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிசிரிவி கமராக்கள் இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்த நிலையில் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றது தினேஷ் சாப்டரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிசிரிவி கமராக்கள் இன்மை தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இதேவேளை தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 75 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam