மனைவியின் தாயாருக்கு தினேஷ் சாப்டர் அனுப்பியுள்ள தகவல்! வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வயர்கள்
பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் மரணம் தற்கொலையா என்பது தொடர்பில் தற்போது சிஐடியினரின் கவனம் திரும்பியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பாக ஏற்கனவே சுமார் 75 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் தினேஷ் சாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு (மாமியாருக்கு) அனுப்பிய “இத்தகைய நல்ல மகளை வளர்த்த அம்மாவுக்கு மிக்க நன்றி” போன்ற உணர்ச்சிகரமான கருத்துக்கள் அடங்கிய தகவலின் மீது சிஐடியினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
கொழும்பு 7இல் உள்ள தினேஷ் சாப்டரின் வீட்டிற்கு சென்று ஆராய்ந்த போது அங்கிருந்து தினேஷ் சாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் அன்டனா வயரின் எஞ்சிய பகுதியும், அவரின் கைகளை கட்ட பயன்படுத்தப்பட்டிருந்த வேறு வகை வயருடன் தொடர்புடைய வயரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



